Breaking News : கொடைக்கானல் ஏரியில் தனியார் அமைப்பு படகுகளை இயக்க தடை

கொடைக்கானலில் தனியார் படகு குழாம், விதிகளை மீறி செயல்பட்டதோடு, ஏரியை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அந்த அமைப்பு படகுகளை இயக்க தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஏரி அமைந்துள்ள பகுதியில், 8 சென்ட் பரப்பளவு மட்டும் ஒரு தனியார் படகு குழாம் ஒன்றிற்கு ஒப்பந்த அடிப்படையில் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சம்மந்தப்பட்ட படகு குழாம், 10 ஆயிரம் சதுர அடிக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்து வணிக நோக்கில் செயல்படுவதாக கூறப்படுகிறது.

இந்த படகு குழாமின் ஒப்பந்த காலம் கடந்த செப்டம்பருடன் நிறைவடைந்த நிலையிலும், தற்போதும் சட்ட விரோதமாக படகுகள் இயக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.

இதுகுறித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு, மறு உத்தரவு வரும் வரை கொடைக்கானல் தனியார் படகு குழாம், படகு போக்குவரத்து நடத்த தடை விதித்து உத்தரவிட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே