ஓ.பன்னீர்செல்வத்துடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.இந்த சமயத்தில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற பிரச்சினை எழுந்து வருகிறது.
இதனிடையே அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், தங்கமணி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் துணை முதலமைச்சரும்,அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்சியில் உள்ள பொறுப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் அமைச்சர்கள் முதலமைச்சர் பழனிசாமியுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.