#BREAKING : மருத்துவ சேர்க்கை : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு!

மருத்துவ சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை 4.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.

இந்த கூட்டத்தில் துணை முதல்வர ஓ பன்னீர்செல்வம் உள்பட பல்வேறு அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்த அமைச்சரவைக்கூட்டத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

உள் ஒதுக்கீடு மூலம் சுமார் 500 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் 5 ஆயிரம் கோடி ரூபாயில் முதலீடு செய்யும் 6தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் அனுமதிக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

அனைவருக்குமான கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கிராம புறங்களில் 10 ஆயிரத்துக்கும் குறைவான வருமானம் கிடைக்கும் கோவில்களை திறக்கவும்; மதுரை, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே