BREAKING : ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கு: 5 நீதிபதிகள் கொண்ட அமர்வே விசாரிக்கும்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

காஷ்மீருக்கு சிறப்பு தகுதி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விரிவான அமர்வு விசாரிக்க அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு தகுதி தரும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

370-வது பிரிவை ரத்து செய்ததை எதிர்த்த வழக்கை விரிவான அமர்வு விசாரிக்க மனுதாரர்கள் கோரியிருந்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே