திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கைதுக்கும் தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இன்று பல்வேறு அரசுப் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியிருப்பதாவது, ஆர்.எஸ். பாரதி கைதுக்கும் தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சட்டத்தின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பட்டியலினத்தவர்களை விமர்சனம் செய்ததால்தான் புகார் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அரசு மீது ஸ்டாலின் புகார்களைக் கூறி வருகிறார்.

ஆர்.எஸ். பாரதி இழிவாகப் பேசிய போதே கட்சித் தலைவரான ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும். ஆர்.எஸ். பாரதி தரும் புகார்களில் உண்மைத் தன்மையை ஊடகங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

அரசின் இ-டெண்டரில் முறைகேடு நடப்பதாக ஆர்.எஸ். பாரதி கூறுவது பொய்.

ஏதோ விஞ்ஞானி போல ஆர்.எஸ். பாரதி ஊடக விளம்பரத்துக்காகப் புகார்களை கொடுக்கிறார் என்று முதல்வர் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கரோனா பரிசோதனை அதிகளவில் செய்யப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கரோனா பாதிப்பு தமிழகத்தில் சமூகப் பரவலாக மாறவில்லை.

கரோனாவைக் கட்டுப்படுத்த தமிழகம் கேட்ட நிதியில் போதிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை.

தமிழகத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன.

மருத்துவர் நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும். புறநகர் பகுதிகளில் சிறு, குறு தொழில்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.

கரோனா தடுப்புப் பணியில் அர்ப்பணிப்பு உணர்வோடு ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நன்றி என்று முதல்வர் பழனிசாமி தெரவித்தள்ளார்.

அரசின் வழிமுறையை மாவட்ட நிர்வாகம் பின்பற்றியதால் கொரோனா இல்லாத மாவட்டமாக சேலம் மாறியுள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் சுமார் 13 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் நடைபெறுகின்றன. அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது.

வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே தற்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. புறநகர் பகுதிகளில் சிறு, குறு தொழில்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.

ஆட்டோக்கள் இயக்கவும், சலூன்கள் திறக்கப்பட்டுள்ளது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வெளியே சென்றால் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையால், சமூக பரவல் ஏற்படவில்லை.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட நர்சுகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் மட்டுமே நோய் பரவல் உள்ளது.

தமிழக அரசு கேட்ட அளவிற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை. படிப்படியாக அளித்து வருகிறது.

ஊரடங்கை தடுப்பது குறித்து நிபுணருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். தமிழகத்தில் 35 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என நிதித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனை சமாளிக்க பல நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் வளர்ச்சி பணிகள் குறையாமல் பார்த்து கொள்ளப்படும்.

ஜிஎஸ்டி நிதியை படிப்படியாக அரசு வழங்கிவருகிறது விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்க அதிமுக அரசு தொடர்ந்து துணை நிற்கும் இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே