மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்2020 தாக்கல் செய்தார்..

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தின் இறுதிநாளில் மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் வழக்கம் இருந்து வந்தது.

இந்த வழக்கத்தை கடந்த 2017-ம் ஆண்டு மாற்றிய பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பிப்ரவரி 1-ந் தேதியன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது.

2020-21-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் என்பதால், குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது.

இந்த நிலையில், 2020-21-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். அதன் முழுவிபரங்களை தற்போது காணலாம்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கும் சிறப்பு அம்சங்கள் :

இந்தியாவின் பொருளாதாரத்தின் மீது அதீத நம்பிக்கை ஏற்படும் வகையில் மோடி அரசு செயல்படுகிறது.

நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் பலனடையும் வகையில் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 வருடங்களில் பிரதமர் மோடி தலைமையிலான அரசில் நாடு முழுவதும் நிர்வாக சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் பொருளாதார அடிப்படைகள் வலுவாக இருக்கின்றன.

நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி முறை அமல்படுத்தப்பட்டிருப்பது பிரதமர் மோடி அரசின் வரலாற்று சிறப்புமிக்க சாதனையாகும்.

ஜி.எஸ்.டி. அமலான பிறகு ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 4 சதவீதம் அளவிற்கு அன்றாட செலவு குறைந்துள்ளது.

பணவீக்க விகிதம் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. வங்கித்துறையில் பெரும் வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நிர்வாக சீர்திருத்தங்களின் மூலம் நாட்டின் பொருளாதாரம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

மக்களின் செலவிடும் சக்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை ஒருங்கிணைக்கும் வகையில் ஜி.எஸ்.டி. வரி முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

வரி கணக்கு தாக்கல் செய்யும் மிக எளிமையான முறை வரும் ஏப்ரல் மாதம் முதல் அமல்

சுமார் 16 லட்சம் புதிய வரி செலுத்துபவர்கள் தற்போது உருவாகியுள்ளனர்.

40 கோடி வருமான வரிக் கணக்கு நாடு முழுவதும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா

ஜி.எஸ்.டி. மூலமாக சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மக்களுக்கு பணப்பலன் கிடைத்துள்ளது.

நடுத்தர குடும்பத்தின் வருமானத்தை அதிகரிக்க பட்ஜெட்டில் முக்கியத்துவம்

டிஜிட்டல் இந்தியா மூலமாக உலக அரங்கில் இந்தியாவின் வளர்ச்சி உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 52.2 சதவீதமாக இருந்த மத்திய அரசின் கடன், 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 48.7 சதவீதமாக குறைந்துள்ளது.

பட்ஜெட்டின் 3 முக்கிய நோக்கம் : எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தல், பொருளாதாரத்தை மேம்படுத்துதல், சமுதாயத்தின் மீது அக்கறை செலுத்துதல்.

கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பை உறுதி செய்ய பட்ஜெட்டில் முக்கியத்துவம்

விவசாயிகள் வருமானத்தை 2 மடங்காக்க தொடர்ந்து மத்திய அரசு பணியாற்றும்

வேளாண் சந்தையை தாராளமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்

வேளாண் துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த 16 கட்டங்களாக திட்டம் இயற்றி நடவடிக்கை எடுக்கப்படும்

தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களில் தனி கவனம் செலுத்தப்படும்

20 லட்சம் விவசாயிகள் சோலார் பம்புகள் அமைக்க உதவி செய்யப்படும்.

அனைத்து வகையான உரங்களையும் சமமாக பயன்படுத்தும் வகையில் திட்டம்

பூமி திருத்தி உண் எனும் ஔவையாரின் ஆத்திச்சூடியை சுட்டிக்காட்டி, நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை

இளைஞர்களே பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக திகழ்கிறார்கள்

கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளித்துள்ளன.

கிராமப்புற பெண்களுக்காக தானிய லட்சுமி எனும் புதிய திட்டம் அறிமுகம்

விளைபொருட்களை எளிதாக விநியோகிக்க தனியார் பங்களிப்புடன், குளிர்சாத வசதியுடன் தனி ரயில்

விமான போக்குவரத்து துறை மூலமாக கிருஷி உடான் எனும் திட்டம் அமல்படுத்தப்படும்

ஒரு மாவட்டம் – ஒரு உற்பத்தி என்கிற அடிப்படையில் தோட்டக்கலைத்துறையில் புதிய முயற்சி

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே