#BREAKING : சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை 5ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!

சென்னை, மதுரை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கை அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.

தொடர்ந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகளை பதிவு செய்து வந்த தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தொடர்ந்து அதிக பாதிப்புகளை சந்திக்கும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த ஜூன் 19 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

மதுரையில் ஜூன் 23 நள்ளிரவு 12 மணி முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மேலும் நோயை கட்டுப்படுத்த, அரசுக்கு ஆலோசனைகள் வழங்க, மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, மதுரை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில், ஜூலை 5 வரை முழு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே