#BREAKING : தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை – முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்!

சென்னை கிண்டியில் ரூ.127 கோடி மதிப்பிலான கொரோனா சிறப்பு மையத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

கொரோனா சிகிச்சை மையத்தில் அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

எய்ம்ஸ் ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையாக மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர்களுடன் காணொளி மூலம் நோயாளிகள் பேசும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் 95 பிசிஆர் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

நோயாளிகள் மருத்துவர்கள் மற்றும் உறவினர்களுடன் காணொளியின் மூலம் பேசலாம். சிகிச்சை முடிந்து குணமடையும் சதவீதம் அதிகரித்து வருகிறது.

58 சதவீத பேர் குணமடைந்துள்ளனர்.

கிண்டி கொரோனா சிகிச்சை மையத்தில் யோகா செய்யவும் வைபை போன்ற வசதிகள் உள்ளன.

தமிழக அரசிடம் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் உள்ளன.

தமிழகத்தில் கொரோனா பரவல் சமூகப்பரவலாக மாறவில்லை.

பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை விரட்டியடிக்கலாம். தமிழகம் முழுவதும் 75,000 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளன.

கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டிய அதேவேளையில் மக்களின் வாழ்வாதாரத்தையும் அரசு காக்க வேண்டும். அரசின் நிதிநிலைமைக்கு ஏற்ப மக்களுக்கு உதவி செய்து வருகிறது.

மக்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டு. தமிழகத்தில் இன்னொரு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை” என தெரிவித்தார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே