#BREAKING : தமிழகத்தில் இன்று (ஜூலை 07) 3,616 பேருக்கு கொரோனா தொற்று ; 65 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று புதிதாக 3,616 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது.

அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, ஐந்து அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது.

இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

இந்த நிலையில்தான் இன்று கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாயின. 

அதில், தமிழகத்தில் 50 அரசு பரிசோதனை மையங்களும், 46 தனியார் பரிசோதனை மையங்களும் உள்ளன.

இன்று மட்டும் 35,423 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதனால் மொத்த பரிசோதனை 13,52,360ஆக இருக்கின்றது.

புதிதாக 3,616 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக 4,545-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை கொரோனா பாதித்த 71,116-பேர் மீண்டுள்ளனர்.

இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த எண்ணிக்கை 1,636-ஆக அதிகரித்துள்ளது. அதே போல 45,839 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று மட்டும் 1,203 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 71,230ஆக உயர்ந்துள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே