தங்க கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தாவது: தங்க கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது.
என்.ஐ.ஏ., விசாரணைக்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.
தங்க கடத்தல் பணம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாக என்.ஐ.ஏ., தெரிவித்துள்ளது.
இதில் சம்பத்தப்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
முதல்வர் அலுவலகத்தில் விசாரணை நடத்த முடிவு செய்தாலும், அதற்கு முழு அனுமதி அளிக்கப்படும்.
விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வரட்டும்.
ஸ்வப்னாவிடம் தொடர்பில் இருந்த முதன்மை செயலர் சிவசங்கர், அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஐடி.,யில் ஸ்வாப்னாவிற்கு பதவி வழங்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.