#BREAKING : அமைச்சர் செல்லூர் ராஜூ கொரோனாவால் பாதிப்பு

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றால், எதிர்கட்சி மற்றும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் என அரசியல்வாதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், கொரோனா பாதிப்புக்குள்ளாகி, தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார்.

ஸ்ரீ பெரும்புதுார் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பழனி, ரிஷிவந்தியம் தி.மு.க., எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர்.

உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ., குமரகுரு, பரமக்குடி எம்.எல்.ஏ., சதன் பிரபாகர், செய்யூர் எம்.எல்.ஏ., அரசு, செஞ்சி எம்.எல்.ஏ.,மஸ்தான் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல், முன்னாள் அமைச்சர் வளர்மதி, மின் துறை அமைச்சர் தங்கமணி, அவரது மகன் தரணிதரன் ஆகியோருக்கு, நோய் தொற்று உறுதியானது. 

இருவரும் சிகிச்சைக்காக, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சமீபத்தில் ராஜூவின் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே