கல்வித் தொலைக்காட்சி: வகுப்புகள், பாடம், நேரம்; அட்டவணை வெளியானது

கல்வித் தொலைக்காட்சி மூலம் நடக்கும் பாடம், வகுப்புகள், நேரம், என்ன பாடம் என்பதற்கான பட்டியலையும், அலைவரிசை நிறுவனங்கள் குறித்த தகவலையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடக்கும் நேரம்:

2-ம் வகுப்பு மாலை 5 முதல் 5:30 மணி வரை

3-ம் வகுப்பு மாலை 5:30 முதல் 6 மணி வரை

4-ம் வகுப்பு மாலை 6 முதல் 6:30 மணி வரை

5-ம் வகுப்பு மாலை 6:30 முதல் 7 மணி வரை

இது தவிர 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலும், நீட் ஜெஇஇ-க்கான வகுப்புகளுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. தினமும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை வகுப்புகள் நடக்கின்றன.

கல்வித் தொலைக்காட்சியில் பாடங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படும். இதனைக் கீழ்க்கண்ட அலைவரிசைகளில் தமிழ்நாடு முழுவதும் காணலாம்.

சேனல் எண்கள், நிறுவன விவரம்:

1. TACTV (தமிழ்நாடு அரசு கேபிளில்) – 200

2.SCV – 98

3. TCCL – 200

4. VK DIGITAL – 55

5. AKSHAYA CABLE – 17

6. Youtube – shorturl.at/pJKV0

இந்த வாய்ப்பினை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

தினசரி நடக்கும் பாடங்கள், வகுப்பு, நேரம் வாரியான பட்டியல் போன்றவற்றை இந்த https://www.kalvitholaikaatchi.com/ இந்த இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே