ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படம் பற்றி மனம் திறந்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்

ஈஷா யோக மையத்தின் காவிரி கூக்குரல் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவை ஈஷா மையத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், அவ்வளாகத்தில் மரக்கன்று நட்டார். பின்னர், மாணவர்களுடன் இணைந்து நாற்றுகள் வளர பைகளில் விதைகளை ஊன்றினார்.

அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கங்கனா ரனாவத், மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ்நாட்டு உடனான தனது உறவு வலுப்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா பல்வேறு போராட்டங்களை தன் வாழ்வில் சந்தித்ததை போலவே, தனது வாழ்வும் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் தெளிவுபடுத்தி உள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே