எந்த திரைப்படத்தையும் வெளியிட மாட்டோம் : திரைப்பட விநியோகஸ்தர் சங்கம்

வருகிற 27ஆம் தேதி முதல் எந்தவொரு திரைப்படத்தையும் வாங்கி, வெளியிடப்போவதில்லை என தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது.

சென்னை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், படம் வாங்கும்போது நடைபெறும் பணப்பரிவர்த்தனைக்கு 10 விழுக்காடு டிடிஎஸ் பிடிப்பது, கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.

இந்த முறையை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த டி.ராஜேந்தர், தமிழ்நாடு அரசு, மாநில கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

மேலும், திரைப்படங்களுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டியையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் டி.ராஜேந்தர் கோரிக்கை விடுத்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே