காதல் செய்வதில் சென்னை முதலிடம் பெற்றுள்ளதாக பிரபல டேட்டிங் செயலியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெண்களுக்கான பிரபல டேட்டிங் செயலியான ‘பம்பிள்’ செயலி, தொற்றுநோய் காலத்தில் குறிப்பாக இரண்டாவது அலைக்குப் பிறகு டேட்டிங் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்துள்ளது.

அதன்படி கீழ்குறிப்பிட்ட சுவாரசியமான முடிவுகள் ஆய்வில் தெரியவந்துள்ளன.

டேட்டிங் செய்வதில் எந்த பண்பு அவசியம் என்ற ஆய்வில் உணர்ச்சி ரீதியான இணைப்பு(60%) மற்றும் இரக்கம்(55%) ஆகிய இரண்டும் முன்னுரிமை அளிக்கப்படுகின்றன.

10 இந்தியர்களில் 9 பேரிடம் நேர்மறையான டேட்டிங் நடத்தை அதிகரித்துள்ளது.

டேட்டர்கள் புதிய நபர்களைச் சந்திக்கும்போது நம்பிக்கை மற்றும் தெளிவு காரணமாக புதுப்பிக்கப்பட்ட உணர்வைப் பெறுகிறார்கள்.

ஐந்து பேரில் ஒருவர் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்கள். இதில், தில்லி, சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் முன்னிலையில் உள்ளது.

இந்தியா முழுவதும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால், மூன்றில் ஒருவர் (33%) டேட்டிங் செய்வதில் நம்பிக்கையுடன் உள்ளனர்.

33% ஒற்றை இந்தியர்கள் நேரடியாக சந்திப்பதற்கு முன்பு ஒருவரையொருவர் தெரிந்துகொள்ள வீடியோ டேட்களைப் பயன்படுத்துகின்றனர்.

தன்னார்வத் தொண்டு, சமூகக் காரணங்களுக்காக நன்கொடை அளித்தல் (48%) தொழில்/லட்சியத்தின் தேர்வு – 45%, ஆர்வங்களின் பொருந்தக்கூடிய தன்மை – 45%, நிதி நிலைத்தன்மை – 40% பச்சாத்தாபம் – 32% ஆகிய பண்புகளும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் அதிகமான தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் தளர்த்தத் தொடங்கியுள்ளதாலும், இந்தியர்களிடையே டேட்டிங் செயல்பாடு அதிகரித்துள்ளது.

2021 இல் டேட்டிங்-க்கான முதல் 5 காரணங்கள்

  • நீண்ட பயணங்கள்
  • உணவகத்தில் சாப்பிடுவது
  • அருகிலுள்ள அல்லது உள்ளூர் கஃபே/டீக்கடைக்கு செல்வது.
  • பூங்கா அல்லது சுற்றுப்புறத்தில் நடைபயணம்
  • திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படுவதால் திரைப்படங்களுக்குச் செல்வது

மேலும், தொற்றுநோயின் இரண்டாவது அலைக்குப் பிறகு, ஆன்லைன் டேட்டிங்கில் நேர்மறையான நடத்தையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியர்களில் 10 ல் 9 (85%) பேர் நேர்மறையான டேட்டிங் நடத்தைகளில்அதிகரித்துள்ளதாக உணர்கிறார்கள்.

கணக்கெடுக்கப்பட்டவர்களில் 46% காதல்(ரொமான்டிக்) செய்வது அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

ரொமான்டிக்கில் சென்னை மற்றும் புணே முதலிடத்தில்(46%) உள்ளது. இதில்தொடர்ந்து தில்லி (44%), பெங்களூரு (44%), மும்பை (42%) மற்றும் கொல்கத்தா (42%) ஆகிய இடங்களில் உள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே