மேற்குவங்கத்தில் பாஜக பேரணி…!

மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் ஒரு வாரத்துக்கும் மேலாக போராட்டம் நீடித்து வருகிறது.

அஸ்ஸாம், டெல்லி, மேற்குவங்கம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் போராட்டங்கள் நீடிக்கின்றன. மேற்குவங்கம், பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களில் வன்முறை வெடித்தன.

இது ஒருபுறமிருக்க, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மேற்குவங்கத்தில் பாஜக சார்பில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

பாஜக அரசின் செயல்பாடுகளை கண்டித்து நடைபெறும் போராட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அக்கட்சியின் செயல் தலைவர் ஜெ.பி நட்டா தலைமையில் இந்த பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் பேசிய பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா, குடியுரிமை திருத்த சட்டத்தை மேற்குவங்க மாநில மக்கள் வரவேற்று, ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினார்.

மேற்குவங்கத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் தேச பக்தர்கள் என்றும் பாராட்டி பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே