பத்திரிகையாளர் கஷோகி கொலை வழக்கு – 5 பேருக்கு தூக்கு தண்டனை

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்ட வழக்கில் சவுதி அரேபியா நீதிமன்றம் ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது. மூன்று பேருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் ஊடகத்தின் செய்தியாளர் ஜமால் கஷோகி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதி துருக்கி நாட்டிலுள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் வைத்து அந்நாட்டு அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டார்.

இந்தப் படுகொலை நடைபெற்று சில தினங்களுக்கு பின்னரே, கொலை நடைபெற்றது உலகக்கு தெரியவந்தது.

இந்தச் சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதனால், உலக நாடுகள் பலவும் சவுதி அரேபியாவுக்கு கண்டனங்களைத் தெரிவித்தன.

இந்தச் சம்பவம் தொடர்பாக சவுதி அரேபியா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டது. 5 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 பேருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே