நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான பாஜகவைச் சேர்ந்த கல்யாண்ராமன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

எஸ்.பி பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் இன்று மாலை உத்தரவிட்டுள்ளார்.

மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தை தொடர்ந்து, கடந்தாண்டு குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பான பேச்சு தொடர்பாக கோவை மாநகர ராமநாதபுரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன் கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய கல்யாணராமன், இஸ்லாமிய இறைத் தூதரான நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசினார்.

இதை கண்டித்து, அந்த நிகழ்ச்சியின் போதே இஸ்லாமியர்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மற்றொரு மதத்தினரை இழிவு படுத்தும் நோக்கில் பேசியதற்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

கல்யாணராமன் மீது குவிந்த தொடர் புகார்களால் அவரை கைது செய்த காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் தற்போது அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே