பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம் தலைமையில் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றுவோம் என பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்த சி.டி.ரவியிடம் பாஜக கொடுத்த நெருக்குததால் அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா அறிவித்துள்ளாரா என நிரூபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த சி.டி.ரவி,’அதிமுகவுடன் சசிகலாவை இணைக்க பாஜக முயற்சி செய்கிறதா என்று நிரூபர்கள் கேட்டனர்.

இன்று சசிகலா அரசியலில் இருந்து விலக பாஜக காரணமா என்று கேட்கிறீர்கள்  இரண்டுமே வதந்தி தான்.

சசிகலா அரசியலில் இருந்து ஓதுங்குவதாக அறிவித்ததை பாஜக வரவேற்கிறது.

ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் வகையில் சசிகலா முடிவு எடுத்துள்ளார். விரைவில் டிடிவி தினகரனும் சரியான முடிவை எடுப்பார்’ என்றார்.

தொடர்ந்து பேசிய சி.டி.ரவியிடம், தினகரன் அதிமுக வாக்குகளை பிரிப்பாரே என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ரவி,’ இன்னும் காலம் இருக்கிறது.

ஜெயலலிதாவின் கனவு ஒருங்கிணைந்த அதிமுக தான்.ஜெயலலிதா கனவை தினகரன் நிறைவேற்றுவார் என நம்புகிறோம்.

அதிமுகவை பிளக்க பாஜக முயற்சி செய்யுமா ?..ஜெயலலிதா கனவை பொய்யக்க பாஜக செய்யுமா ?. அதிமுகவை மறுபடியும் ஆட்சிப் பொறுப்புக்கு கொண்டு வருவது தான் பாஜகவின் திட்டம்.

ஜெயலலிதாவின் கனவை அதிமுக – பாஜக கூட்டணி நிறைவேற்றும்.

அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்பதைத்தான் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என்று சசிகலா கூறியுள்ளார்,’ என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே