நானும், ரஜினியும் மக்களுக்காக எந்த ஈகோவையும் விட்டுத்தந்து ஒன்றிணைய தயாராக உள்ளோம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வரும் நிலையில் கடந்த 13-ஆம் தேதி முதல் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

முதல் கட்டமாக சீரமைப்போம் தமிழகத்தை எனும் பெயரில் மதுரையில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

இதையடுத்து இன்று கோவில்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

அப்போது, செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன், நானும், ரஜினியும் மக்களுக்காக எந்த ஈகோவையும் விட்டுத்தந்து ஒன்றிணைய தயாராக உள்ளோம் என்று கூறியுள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவுக்கு நீட்சியாக நான் செல்லவில்லை, எம்ஜிஆருக்கு நீட்சியாக எந்த நடிகரும் இருக்கலாம். எம்ஜிஆர் திமுகவின் திலகமும் இல்லை.

அதிமுகவின் திலகமும் இல்லை. அவர் மக்கள் திலகம் என்று தெரிவித்துள்ளார்.

எனது பரப்புரை பயணத்திற்கு அனுமதி கொடுத்தது ஏன்? பரப்புரைக்கு சென்றால் அதை தடுப்பது ஏன்? என்று பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளார். ஒவ்வொரு இடத்திலும் எங்கள் பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கமல்ஹாசன் குற்றசாட்டியுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே