திமுக கூட்டணியில் விசிக 6 தொகுதிகளை ஏற்கமாட்டோம் என்று சென்னை மாவட்ட நிர்வாகிகள் முழக்கம் ஏற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

விசிக வின் அவசர ஆலோசனை கூட்டம் அசோக் நகரில் உள்ள அலுவலகத்தில் வைத்து தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த பொழுதே சென்னை மாவட்ட நிர்வாகிகள் 6 தொகுதிகளை ஏற்கமாட்டோம் என்று முழக்க மிட்டனர்.

இதனையடுத்து வெளியே வந்த திருமாவளவன் தலைமையின் பேச்சுக்கு கட்டுப்பட வேண்டும் என்று கூறிவிட்டு சென்றார் .

இதனிடையே திமுக கூட்டணியில் 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

சற்று நேரத்தில் திமுக-விசிக இடையேயான தொகுதி பங்கீடு சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே