நாமக்கல் பண்ணைகளில் கறிக்கோழி விலை சரிவை கண்டுள்ளது கோழி பண்ணையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் பரவிய பறவைக் காய்ச்சல் தற்போது இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், கேரளா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த தொற்றானது தமிழகத்தில் பரவாமல் இருக்க கேரளாவில் கோழி, வாத்துக்களின் முட்டை ,இறைச்சி ,தீவனங்களை கொண்டு வரும் வாகனங்கள் திரும்ப அனுப்பப்பட்டு வருகிறது.

அதேபோல் இங்கிருந்து கேரளாவுக்கு கறிக்கோழிகள் ஏற்றுமதி செய்வதும் கணிசமாக குறைந்துள்ளது.

இந்நிலையில் நாமக்கல் பண்ணைகளில் ஒரு கிலோ கறிக்கோழி விலை ரூ. 14 குறைந்து ரூ. 78 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பறவைக் காய்ச்சல் பீதியால் கேரளாவுக்கு ஏற்றுமதி குறைந்ததை அடுத்து கறிக்கோழி விலை சரிந்துள்ளது.

ஏற்கனவே பறவை காய்ச்சல் காரணமாக நாமக்கல் பண்ணைகளில் முட்டை விலை குறைந்து விற்பனையாகி வருகிறது.

நேற்றைய நிலவரப்படி, நாமக்கல் பண்ணைகளில் முட்டை விலை 25 காசு குறைந்து ரூ. 4.85 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே