எம்.ஜி மோட்டாரின் குறைந்த விலை மின்சார கார்!!!

இந்தியாவில் மின்சார வாகனங்களின் வெற்றி இந்த வாகனங்கள் எத்தனை மைலேஜ் கொடுக்கும் என்பதையும் பொறுத்தது. இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான வளர்ந்து வரும் சந்தையைப் பொறுத்தவரை, எம்.ஜி மோட்டார் தனது மின்சார வாகனங்களின் புது புது மாடல்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது.

சீன ஆட்டோ மொபைல் நிறுவனமான எம்.ஜி மோட்டார், சீனாவின் எஸ்.ஏ.ஐ.சி மோட்டர் நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது முதல் மின்சார கார் எம்.ஜி இசட் எஸ்.வி. மாடலை அறிமுகப்படுத்தியது. இந்திய கார் சந்தையில் விலை உணர்திறன் காரணமாக, எம்ஜி மோட்டார் இங்கே ஒரு மலிவு மின்சார காரை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில், இந்த காரின் விலை 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்கும். இதற்கான அறிக்கையில், எம்.ஜி மோட்டார் இந்திய சந்தையில் தேவைக்கான அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து வருகிறது, அதன் பின்னரே புதிய காரின் விலையை தீர்மானிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரூ .5 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்வதன் மூலம் தனது மின்சார கார் உற்பத்தி திறனை விரிவுபடுத்த போவதாக எம்ஜி மோட்டார் சமீபத்தில் அறிவித்தது. இந்த நடவடிக்கை எம்.ஜி மோட்டார் அதன் போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் அதன் மின்சார வாகனத்தின் விலையை தீர்மானிக்க உதவும்.

Related Tags :

eChrargeBays| MG Motors

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே