அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்குச் சென்ற டிடிவி தினகரன், அங்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார்.

தேர்தல் நிலவரம் குறித்தும் அடுத்தகட்ட பிரசாரம் குறித்தும் பேசப்படுவதாகத் தெரிகிறது.

அப்போது அவருடன் கட்சியின் துணை செயலாளர் எல்.கே சுதீஷ் உடனிருந்தார்.

அத்துடன் இந்த இருகட்சிகளுக்கான பொதுவான எதிரியாக அதிமுக உள்ளதால் தேர்தல் வியூகங்கள் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது.

முன்னதாக, அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் பிரச்னை காரணமாக அக்கூட்டணியில் இருந்து விலகி அமமுகவில் சேர்ந்தது.

தற்போது அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதல்வர் வேட்பாளராக டிடிவி தினகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த முறை தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடாத நிலையில் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே