ரயில்வே தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் இனி ஒரே எண் தான்..!!

ரயில் பயணம் குறித்த அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் ஒரே ஹெல்ப்லைன் எண்ணின் கீழ் தீர்வு கிடைக்கும் வகையில், இந்திய ரயில்வே துறை 139 என்ற எண்ணை அறிமுகம் செய்துள்ளது.

இன்று அதிகமானோர் பேருந்து பயணத்தை விட ரயில் பயணத்தில் கட்டணம் குறைவானது என்பதால், ரயில் பயணத்தை தான் விரும்புகின்றனர்.

இந்நிலையில் ரயில் பயணம் குறித்த அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் ஒரே ஹெல்ப்லைன் எண்ணின் கீழ் தீர்வு கிடைக்கும் வகையில், இந்திய ரயில்வே துறை 139 என்ற எண்ணை அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம் பயணம் தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு கிடைக்கும்.

இதுகுறித்து ரயில்வே துறை கூறுகையில், இந்த எண்ணை தொடர்பு கொண்டால் பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவி குறித்த விபரங்கள், கட்டணம் குறித்த விவரங்கள், உணவு முன்பதிவு மற்றும் புகார் குறித்த விவரங்கள் அனைத்திற்கும் இதன் மூலம் பதிலை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

மேலும், பயணிகள் துரிதமாக சேவையை வழங்கும் நோக்கில் இந்த எண் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும்; இந்த எண்ணானது சுமார் 12 மொழிகளில் சேவையில் உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே