பீட்ரூட்ல இப்படி பாயசம் பண்ணுங்க… அப்புறம் அடிக்கடி பண்ணுவீங்க…

பீட்ரூட் பாயசம், பீட்ரூட் கீர் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு சுவையான இந்திய ரெசிபி ஆகும். மேலும் இது, நாம் அனைவருக்கும் மிகவும் சத்தான மற்றும் ஆரோக்கியமான ஒரு உணவாகும். பொதுவாக பீட்ரூட்டை விரும்பாத குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் கூட இந்த சுவையான பாயசத்தை விரும்பி சாப்பிடுவர். இந்த சத்தான கீர் சூடாக பரிமாறப்படும் போது மிகவும் அருமையாக இருக்கும். நீங்கள் 3 முதல் 4 நாட்களுக்கு இந்த பாயசத்தை பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம். இன்னும் எதற்காக காத்திருக்கிறீர்கள்? இந்த செய்முறையை நீங்கள் எவ்வளவு எளிதாக உருவாக்கலாம் என்பதை இப்பொழுதே இந்த பதிவை படித்து தெரிந்து கொண்டு, உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த ஆரோக்கியமான பாயசத்தை செய்து கொடுத்து மகிழுங்கள்.

முக்கிய பொருட்கள்
4 medium பீட்ரூட்
1 கப் பால்
பிரதான உணவு
1 கப் நெய்
3/4 கப் சீனி
தேவையான அளவு பொடியாக்கப்பட்ட ஏலக்காய்
அழகூட்டுவதற்கு/ அலங்கரிப்பதற்கு
தேவையான அளவு முந்திரி
How to make: பீட்ரூட்ல இப்படி பாயசம் பண்ணுங்க… அப்புறம் அடிக்கடி பண்ணுவீங்க…
Step 1:
ஒரு வாணலியில் நெய் சேர்த்து சூடாக்கவும். நெய் சூடானதும், அதில் நறுக்கிய முந்திரி சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை கிளறவும். பின்பு அதில், அரைத்த பீட்ரூட் சேர்த்து நன்கு கலக்கவும்.
Step 2:
அடுத்து அதில் இன்னும் சிறிது நெய் சேர்த்து அனைத்து பொருட்களையும் நடுத்தர தீயில் சமைக்கவும். 5 நிமிடங்களுக்கு பிறகு, ஒரு கப் கிரீமி பால் சேர்த்து அவற்றை ஓர் 15 நிமிடங்களுக்கு மேல் சமைக்கவும். தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் பால் சேர்த்து கொள்ளலாம்.
Step 3:
பீட்ரூட் மென்மையாக மாறியதும், பாத்திரத்தில் 3/4 கப் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
Step 4:
இவற்றை, ஐந்தில் இருந்து ஏழு நிமிடங்களுக்கு சமைக்கவும். ஏழு நிமிடம் கழித்து, இதில் இரண்டு டீஸ்பூன் நெய் சேர்த்து கிளறி இறக்கினால் பீட்ரூட் பாயசம் தயார்.
Step 5:
இந்த சுவையான பீட்ரூட் பாயசத்தை உங்கள் மனதிற்கு பிடித்தவர்களுக்கு சமைத்து கொடுத்து மகிழுங்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே