கடலைமாவுல பராத்தா செய்திருக்கீங்களா? இப்படிதான் செய்யணும்

பேசன் பராத்தா மிகக் குறைந்த பொருட்களை கொண்டு செய்யும் எளிமையான ரெசிப்பியாகும். இந்த பராத்தா முழுக்க கடலை மாவுடன் பலவிதமான மசாலாக்கள் சேர்ந்த கலவையான சுவையுடன் உங்கள் வாயில் கரையும் சுவையும் கொண்டது. இந்த ஸ்பெஷல் பேசன் பராத்தா வித்தியாசமான முறையில் செய்யப்படுகிறது. கடலை மாவுடன் மற்ற எல்லா பொருட்களையும் கலந்து மாவு பிசைந்து பிறகு கோதுமை சப்பாத்திகளாக திரட்டப்படுகிறது. இன்னமும் எதுக்காக வெயிட் பண்றீங்க..? இந்த ரெசிப்பியை எளிமையாக செய்வது எப்படின்னு மேலே படிச்சு கத்துக்கோங்க.

முக்கிய பொருட்கள்
1 கப் கோதுமை மாவு
1 கப் கடலை மாவு
பிரதான உணவு
தேவையான அளவு மஞ்சள்
தேவையான அளவு மிளகாய் பொடி
தேவையான அளவு ஹிமாலயன் உப்பு
1 தேக்கரண்டி காய்ந்த வெந்தய கீரை
1/2 தேக்கரண்டி சீரகம்
1/2 தேக்கரண்டி சீரக விதைகள்
தேவையான அளவு பெருங்காயம்
How to make: கடலைமாவுல பராத்தா செய்திருக்கீங்களா? இப்படிதான் செய்யணும்
Step 1:
ஒரு கிண்ணத்தில் கடலை மாவை எடுத்துக் கொண்டு, அதில் சிறிதளவு பெருங்காயம், கஸுரி பவுடர், கரம் மசாலா, சிகப்பு மிளகாய் தூள்,
மஞ்சள் போன்ற எல்லா பொருட்களையும் கலந்து கொள்ளுங்கள்.
Step 2:
இப்போது இதில் சிறிது உப்பையும் போட்டு நல்லா கலந்து விடுங்க. இதில் எண்ணெயும் கலந்து கட்டிகளில்லாமல் கலந்துகொண்டு வைச்சிக்கோங்க.
Step 3:
ஒரு தனி கிண்ணத்தில் கோதுமை மாவோடு உப்பையும் கலந்து நல்லா கலந்துக்கோங்க. இதில் தண்ணீர் சேர்த்து மிருதுவான மாவாக பிசைந்துக்கோங்க.
Step 4:
கோதுமை மாவை சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொண்டு சப்பாத்தி போல திரட்டிக்கோங்க. இப்போது கோதுமை சப்பாத்தி மீது கடலை மாவு கலவையை சேர்த்து தட்டையான ரொட்டிகளாக தேய்த்துக் கொள்ளுங்கள்.
Step 5:
மிகவும் குறைவான அழுத்தம் கொடுத்து தேய்த்துக் கொள்ளுங்கள். இதனால் உள்ளே வைத்த ஃபில்லிங் வெளியே வராமல் இருக்கும். தவாவை அடுப்பில் வைத்து சூடானதும், பராத்தாவின் இரண்டு பக்கங்களிலும் பொன்னிறமாக மொறுமொறுப்பாக வேகும் வரை திருப்பிப் போட்டு வேகவைங்க. இதை சாஸ் அல்லது சட்னியோட சுவைத்து மகிழுங்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே