மூங் தால்/பச்சை பயிறு பக்கோடா

மூங் தால் பக்கோடா பெரும்பாலும் மாலை சிற்றுண்டிக்கு ஒரு பொருத்தமான ரெசிபி ஆகும். இதை செய்வது மிகவும் எளிதானது மற்றும் நீங்கள் மாலையில் டீ அல்லது காபியுடன் சேர்த்து சாப்பிட ஒரு சுவையான சிற்றுண்டியாக இருக்கும். மேலும் மழை காலத்தில் சூடாக செய்து சாப்பிட இது ஒரு சூப்பர் ரெசிபி ஆகும்.இந்த ருசியான பக்கோடா இந்தியாவின் வடக்கு பகுதிகளில் மூங் தால் பாஜியா என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் கிழக்கு இந்திய பகுதிகளில் இது டேலர் போரா என்று அழைக்கப்படுகிறது. இந்த பக்கோடாக்கள் சூடாகவும் கிரிஸ்பியாகவும் இருக்கும் போது மிக சுவையாக இருக்கும்.இந்த பக்கோடா வெளிப்புறத்தில் கிரிஸ்பியாகவும், உள்புறத்தில் மென்மையாகவும் இருக்கும். இதை செய்வது எப்பிடி என்று இப்பொழுது பார்க்கலாம்.
முக்கிய பொருட்கள்
1 கப் பச்சைப்பயறு
பிரதான உணவு
1 கைப்பிடியளவு கொத்தமல்லி இலை
தேவையான அளவு பூண்டு பேஸ்ட்
தேவையான அளவு இஞ்சி பேஸ்ட்
3 Numbers பச்சை மிளகாய்
தேவையான அளவு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்
தேவையான அளவு உப்பு
1 தேக்கரண்டி கொத்தமல்லி விதை
How to make: மூங் தால்/பச்சை பயிறு பக்கோடா
Step 1:
ஒரு பாத்திரத்தில் பச்சை பயிறு / மூங் தால் சேர்த்து மூன்றில் இருந்து நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்பு ஊறவைத்த பச்சை பயிறு, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை மிக்சியில் சேர்த்து கெட்டியாக கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
Step 2:
பிறகு அரைத்து வைத்துள்ள பச்சை பயிறு கலவையில் வெங்காய தாழ், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு, அரை டீஸ்பூன் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
Step 3:
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், பக்கோடா கலவையை எண்ணையில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை பொறித்து எடுக்கவும்.
Step 4:
இந்த சுவையான மூங் தால் / பச்சை பயிறு பக்கோடாவை சட்னி அல்லது சாஸுடன் சேர்த்து ஒரு மாலை சிற்றுண்டாக உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறவும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே