நீங்கள் நீங்களாவே இருங்கள்; அப்போதுதான் உங்கள் காதல் பக்குவப்படும்…

எதிர்ப்பார்ப்புகள் அற்ற வாழ்க்கை என்பதே கிடையாது. அதிலும் நாம் அதிகம் நேசிக்கும் உறவுகள் மீது எதிர்பார்க்கும் விஷயங்கள் நடக்கவில்லை எனில் வாழ்க்கையில் விரக்தியே மிஞ்சுகிறது.

அப்படி சில விஷயங்கள் இருந்தால்தான் அது காதல் என நினைத்து எதிர்பார்க்கிறோம்.

அவை நடக்காமல் போகும்போது பிரேக் அப், விவாகரத்து என வாழ்க்கை நகர்கிறது. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

பகிர்தல் :

எல்லாவற்றையும் உங்கள் துணையுடன் நீங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும். அதேபோல் அவர்களும் எதையும் மறைக்காமல் வெளிப்படையாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் அது தவறு.

சில விஷயகளை மறைப்பதும் உறவை பலப்படுத்தும். உங்கள் இருவரையும் தாண்டி உங்களுக்கு மற்றொரு உலகம் உள்ளது என்பதையும் நினைவில் கொள்க.

சமரசம் :

சமரசங்கள் அவசியம்தான் என்றாலும் அது எந்த இடத்தில் எப்போது என்பது அவசியம். உறவில் குறிப்பாக சமரசம் செய்துகொள்வது உறவை நீட்டிக்க உதவும் என்றாலும் அது ஆரோக்கியமல்ல.

பேசிய வேண்டிய இடத்தில் உங்கள் கருத்துகளை, எண்ணங்களை கூறுவது அவசியம்.

முக்கியத்துவம் :

உங்கள் துணைதான் வாழ்க்கையின் முக்கியமானவர் என்றாலும் எல்லாவற்றிற்கும் அவருக்கே முக்கியதுவம் அளிப்பது தவறு.

உங்களுக்குதான் நீங்கள் முதலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதன் பிறகு உங்கள் துணையை கவனிக்கலாம்.

மகிழ்ச்சி :

உங்கள் காதல் உறவு மட்டும் உங்கள் மகிழ்ச்சிக்கான உத்திரவாதம் இல்லை. அவர் வருவதற்கு முன் உங்களின் மகிழ்ச்சி எதுவாக இருந்தது..?

எனவே உறவில் இருப்பதுதான் உங்களுக்கான மகிழ்ச்சி என நினைக்காதீர்கள்.

எதிர்பார்ப்பின்மை :

எதையும் எதிர்பார்க்காமல் எல்லாவற்றையும் கொடுப்பதும், விட்டுக்கொடுப்பதும் தவறு.

நீங்கள் மட்டுமே அனைத்தையும் கொடுக்கிறீர்கள், செய்கிறீர்கள் என்றால் அந்த காதல் முழுமையானது அல்ல. அந்த காதலில் அர்த்தமும் அல்ல.

சண்டையின்மை :

ஆரோக்கியமான காதல் வாழ்க்கை என்றால் சண்டையே இருக்க கூடாது என்று நினைத்தால் தவறு. காதலில் சண்டை அவசியம்.

ஆனால் அது ஆரோக்கியமான சண்டையாக இருக்க வேண்டும். சந்தேகம், புரிதலின்மை போன்றவற்றால் சண்டைகள் இருக்கக் கூடாது.

பொறாமை :

பொறாமை இருந்தால்தான் அவருக்கு உங்கள் மீது காதல் இருக்கிறது என்று நினைப்பது மிக மிகத் தவறு.

பொறாமை என்பதை உங்கள் மீதோ அல்லது உங்கல் காதல் மீதோ நம்பிக்கை இல்லாதபோதுதான் இருக்கும்.

ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் போகப் போக அதுவே பெரும் பிரச்னையாக உருவெடுக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே