பெண் உறுப்பில் ஏற்படும் வெள்ளைப்படுதல் – கையாளும் முறைகள் என்ன..?

பெண்கள் பொதுவாக சந்திக்கும் பிரச்னை அந்தரங்க உறுப்பில் தொற்று. ஆனால் இதை சாதாரணமாகவும் தவிர்க்க முடியாது.

அந்தரங்க உறுப்பை ஆரோக்கியமான முறையில் பராமரிப்பது அவசியம். பொதுவாக பெண்களின் வெஜினாவில் வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும்.

இதை சரியான முறையில் சுத்தம் செய்யாவிட்டால் கிருமிகளாகவும், பூஞ்சைகளாகவும் உருவாகி வெஜினாவில் தொற்றை உண்டாக்கும்.

அந்த வகையில் சரியான பராமரிப்பு இல்லாமையால் வெஜினாவில் தொற்று ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

 வெஜினாவில் தொற்று ஏற்பட்டிருந்தால் அரிப்பு, எரிச்சல், துர்நாற்றம் வீசும். கடுமையான வலி இருக்கும். இந்த அரிப்பு சிரத்தை உண்டாக்கலாம். இவ்வாறான பிரச்னைகளை சந்தித்தால் சில விஷயங்களைக் கையாளுவது அவசியம்.

வெஜினாவில் தொற்று ஏற்பட்டிருந்தால் அரிப்பு, எரிச்சல், துர்நாற்றம் வீசும். கடுமையான வலி இருக்கும். இந்த அரிப்பு சிரத்தை உண்டாக்கலாம். இவ்வாறான பிரச்னைகளை சந்தித்தால் சில விஷயங்களைக் கையாளுவது அவசியம்.

 வெஜினாவை தினமும் தவறாமல் சுத்தம் செய்வது அவசியம். இதற்காக சோப்பு, லோஷன், கிரீம்களை பயன்படுத்துதல் முற்றிலும் தவறு. எனவே வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவினாலே சுத்தமாகும். அந்த இடத்தை அதிகம் ஈரப்பதம் அல்லாமல் வறட்சியாக பார்த்துக்கொள்ளுங்கள். உள்ளாடையும் ஈரமின்றி அணியுங்கள்.

வெஜினாவை தினமும் தவறாமல் சுத்தம் செய்வது அவசியம். இதற்காக சோப்பு, லோஷன், கிரீம்களை பயன்படுத்துதல் முற்றிலும் தவறு.

எனவே வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவினாலே சுத்தமாகும். அந்த இடத்தை அதிகம் ஈரப்பதம் அல்லாமல் வறட்சியாக பார்த்துக்கொள்ளுங்கள். உள்ளாடையும் ஈரமின்றி அணியுங்கள்.

 பாத்ரூமை பயன்படுத்திய பின் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். திருமணமான பெண்கள் உடலுறவுக்குப் பின்பு வெஜினாவை வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவுவது நல்லது.

பாத்ரூமை பயன்படுத்திய பின் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். திருமணமான பெண்கள் உடலுறவுக்குப் பின்பு வெஜினாவை வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவுவது நல்லது.

 பயன்படுத்தும் உள்ளாடை பருத்தித் துணியாக இருப்பது நல்லது. அப்போதுதான் காற்றோட்டம் கிடைக்கும். சிந்தடிக் போன்ற துணிகளை தவிர்க்கவும். இறுக்கமான , காற்று புகாத உள்ளாடைகள் தொற்றை உண்டாக்கும்.

பயன்படுத்தும் உள்ளாடை பருத்தித் துணியாக இருப்பது நல்லது. அப்போதுதான் காற்றோட்டம் கிடைக்கும். சிந்தடிக் போன்ற துணிகளை தவிர்க்கவும்.

இறுக்கமான , காற்று புகாத உள்ளாடைகள் தொற்றை உண்டாக்கும்.

 உடலுறவின் போது தொற்று நோய்களை தவிர்க்க ஆணுறை பயன்படுத்துதல் நல்லது. இது தேவையற்ற கருத்தரித்தலையும் தவிர்க்கும்.

உடலுறவின் போது தொற்று நோய்களை தவிர்க்க ஆணுறை பயன்படுத்துதல் நல்லது. இது தேவையற்ற கருத்தரித்தலையும் தவிர்க்கும்.

 வெஜினா தொற்று ஏற்பட்டிருப்பின் நீங்களாக மருந்தகம் சென்று மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளாதீர்கள். இது பிரச்னையை மேலும் தீவிரமாக்கலாம்.

வெஜினா தொற்று ஏற்பட்டிருப்பின் நீங்களாக மருந்தகம் சென்று மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளாதீர்கள். இது பிரச்னையை மேலும் தீவிரமாக்கலாம்.

 ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி அவசியம் பின்பற்றுங்கள்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி அவசியம் பின்பற்றுங்கள்.

 உங்கள் துணைக்கு அந்தரங்க பகுதியில் ஏதேனும் தொற்று இருப்பின் அது சரியாகும் வரை உடலுறவை ஒத்தி வைத்தல் நல்லது. உங்களுக்கு தொற்று இருந்தாலும் தவிர்த்திடுங்கள்.

உங்கள் துணைக்கு அந்தரங்க பகுதியில் ஏதேனும் தொற்று இருப்பின் அது சரியாகும் வரை உடலுறவை ஒத்தி வைத்தல் நல்லது. உங்களுக்கு தொற்று இருந்தாலும் தவிர்த்திடுங்கள்.

 ஒருவேளை வெஜினாவில் வேறு ஏதேனும் திவிரமான பிரச்னை இருப்பதாக உணர்ந்தால் கூச்சமின்றி மகப்பேறு மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுவது நல்லது. காலம் தாழ்த்துவது பிரச்னையின் தீவிரத்தை அதிகரிக்கலாம்.

ஒருவேளை வெஜினாவில் வேறு ஏதேனும் தீவிரமான பிரச்னை இருப்பதாக உணர்ந்தால் கூச்சமின்றி மகப்பேறு மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுவது நல்லது. காலம் தாழ்த்துவது பிரச்னையின் தீவிரத்தை அதிகரிக்கலாம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே