நீ இன்னும் எங்க கூடயே இருக்கிற மாதிரி இருக்கு தம்பி: சுஷாந்தின் அக்கா உருக்கம்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த மாதம் 14ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்த அவர் இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மும்பை பந்த்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சுஷாந்தின் மரணத்தில் எதுவும் பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டு ஒரு மாதம் ஆகிறது. இந்நிலையில் அவரின் அக்கா ஸ்வேதா சிங் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,

நீ எங்களை விட்டுச் சென்று ஒரு மாதம் ஆகிறது. ஆனால் இன்னும் நீ இங்கு இருப்பது போன்று உணர்கிறோம். லவ் யூ பாய். எப்பொழுதும் நீ சந்தோஷமாக இருப்பாய் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

சுஷாந்தின் முன்னாள் காதலியான நடிகை அங்கிதா தன் வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து அதை புகைப்படம் எடுத்து வெளியிட்டார். சுஷாந்த் இறந்த பிறகு சமூக வலைதளம் பக்கம் வராமல் இருந்த அங்கிதா நேற்று தான் போஸ்ட் போட்டார்.

மேலும் சுஷாந்தின் காதலியான ரியா சக்ரபர்த்தியும் இன்ஸ்டாகிராமில் உருக்கமான போஸ்ட் போட்டிருந்தார். ரியா போட்ட போஸ்ட்டை பார்த்த சுஷாந்தின் ரசிகர்கள் கோபம் அடைந்தார்கள். பாலிவுட்டின் பெரிய ஆட்கள் ரியாவுக்கு பட ஆசை காட்டி சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டிவிட்டதாக ரசிகர்கள் நம்புகிறார்கள். அதனால் தான் ரியாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்து அவரை விளாசியுள்ளனர்.
சுஷாந்த் இறந்து ஒரு மாதமாகிவிட்டது, ஆனால் அவர் இல்லை என்பதை இன்னும் நம்ப முடியவில்லை என்று நடிகை ஹினா கான் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சுஷாந்துக்கு நீதி கிடைக்காமல் ஒரு மாதம் முடிந்துவிட்டது என்று ரசிகர்கள் ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

சுஷாந்தின் மரணம் குறித்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் சுஷாந்த் சிங் வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு சம்மன் அனுப்பப்படாது என்று கூறப்படுகிறது. சுஷாந்த் வழக்கு தொடர்பாக அவரின் தந்தை, சகோதரிகள், வீட்டு பணியாட்கள், மேனேஜர், அங்கிதா லோகந்தே, ரியா சக்ரபர்த்தி, பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி உள்பட 35 பேரிடம் போலீசார் வாக்குமூலம் வாங்கியுள்ளனர்.

சல்மான் கானின் முன்னாள் மேனேஜரான ரேஷ்மா ஷெட்டியிடம் போலீசார் கடந்த வாரம் 5 மணிநேரம் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து சல்மான் கானிடம் போலீசார் விசாரணை நடத்தக்கூடும் என்று பேச்சு கிளம்பியது. ஆனால் சல்மானை விசாரிக்கும் திட்டம் இல்லை என்று துணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.
சுஷாந்தின் மரணம் தொடர்பாக சமூக வலைதளத்தில் ஒரு கதை வலம் வந்தது. சுஷாந்தின் முன்னாள் மேனேஜரான திஷா சாலியன் நடிகர் சூரஜ் பஞ்சோலியின் குழந்தையை சுமந்ததாகவும், அவர் ஏமாற்றியதால் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் சமூக வலைதளங்களில் கூறப்பட்டது. திஷா கர்ப்பமாக இருந்த விஷயம் சுஷாந்துக்கு தெரியும், சூரஜை தக்க சமயத்தில் எக்ஸ்போஸ் செய்ய நினைத்தபோது தான் அவர் தற்கொலை செய்து கொண்டார். சூரஜ் பஞ்சோலியை சல்மான் கான் காப்பாற்றுகிறார் என்று கூறப்பட்டது. அப்படித் தான் சுஷாந்த் வழக்கில் சல்மான் கான் பெயர் வந்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே