கர்நாடகாவில் பட்டாசு விற்பனை & வெடிப்பதற்கு தடை..!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக பட்டாசு வெடிக்கவும், விற்கவும் தடைவிதிக்கப்படும் என முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடித்து கொண்டாடுவது நமது நாட்டு கலாசாரமாகும்.

இந்நிலையில், பட்டாசு வெடிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு 2018-ம் ஆண்டு அக்டோபர் 23-ந்தேதியன்று தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது.

தீபாவளியை கொண்டாடும் கலாசாரத்தை பாதுகாக்கும் வகையிலும், சுற்றச்சூழலை கருத்தில் கொண்டும், கடந்த 2018ம் ஆண்டு அனைத்து மாநிலங்களுக்கும், தீபாவளி அன்று காலை, மாலையில் தலா ஒரு மணிநேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்தது.

மேலும், பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் மாசுபாடு காரணமாக நுரையீரல் பாதிப்பு, கொரோனா நோய் பரவல் காலகட்டத்தில் மேலும் அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இதையடுத்து ஒடிசா, ராஜஸ்தான், டில்லி உள்ளிட்ட சில மாநிலங்களும் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்துள்ளன.

இந்நிலையில், கர்நாடகாவிலும் பட்டாசு வெடிக்கவும், விற்கவும் தடை விதிக்கப்படும் என முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘கர்நாடகாவில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். இதுபற்றி அரசு விரைவில் உத்தரவு பிறப்பிக்க உள்ளது,’ என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே