மீண்டும் “சீடாக்” ஸ்கூட்டர் தயாரிப்பில் பஜாஜ்

இருபது வருடங்களுக்கு முன்பு ஸ்கூட்டர் விற்பனையில் கொடிகட்டிப் பறந்த பஜாஜ் நிறுவனம் தற்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

சீடாக் என்ற பழைய பெயரிலேயே அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்கூட்டர், வரும் ஜனவரியில் முதற்கட்டமாக பெங்களூரு, புனேயில் விற்பனைக்கு வருகிறது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 95 கிலோ மீட்டர் மற்றும் 85 கிலோமீட்டர் பயணிக்கும் வகையில் இரு வகைகளில் இந்த ஸ்கூட்டர் கிடைக்கும்.

ஒரு முறை சார்ஜ் செய்ய 5 மணி நேரம் ஆகும். இதன் விலை ஒன்றரை லட்சம் ரூபாய்க்குள் இருக்கும் என கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே