தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடங்க உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி இரு கட்டமாக நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் பலவும் தீவிர தேர்தல் பணிகளில் களமிறங்கியுள்ளன.

இந்நிலையில் அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கும் பணியையும் தமிழக தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்திற்கு சட்டமன்ற தேர்தலின்போது வழங்கப்பட்ட டார்ச் லைட் சின்னமே ஒதுக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே