கடலூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு..!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அணுக்கம்பட்டு, ஆலப்பாக்கம் ஆகிய இடங்களில் மழையால் சேதமடைந்த வேளாண் பயிர்களைப் பார்வையிட்டார். மேலும் பாதிப்படைந்த நெடுஞ்சாலைகளையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து, காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியின் வடிகால் மதகான வெள்ளியங்கால் ஓடையைப் பார்வையிடுகிறார்.

அதனைத் தொடர்ந்து, திருநாரையூர் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

இதனைத் தொடர்ந்து, சிதம்பரத்தில் சேதமடைந்த இளமையாக்கினார் கோயில் குளக்கரை, சாலியன் தோப்பில் மழையால் சேதமடைந்த நெல் வயல்கள் ஆகியவற்றைப் பார்வையிடுகிறார். 

இதனைத் தொடர்ந்து, மாலை வல்லம்படுகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க உள்ளார்.

அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, சம்பத், எம்எல்ஏக்கள் பாண்டியன், முருகுமாறன், சத்யா பன்னீர்செல்வம், மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங்பேடி, மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி மற்றும் உயர் அதிகாரிகள் முதல்வருடன் இருந்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே