திருச்சி விமான நிலையம் வழியாக கடத்த முயன்ற ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான கடல் அட்டைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியாவின் கோலாலம்பூர் செல்ல மலெண்டோ விமானம் தயாராக இருந்தது.
அதிலிருந்து பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இராமநாதபுரம் கீழக்கரையை சேர்ந்த ஆசாத் அகமது என்பவர் கடல் அட்டைகளை கடத்த முயன்றது தெரிய வந்தது.
அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆசாத் அகமது இடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.