மதுரையில் கொடூரம்..!! மாடுகள் மீது ஆசிட் வீச்சு..!!

நாடு முழுவதும் பெண்கள் மீது அமிலம் வீசும் கொடூர சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது.

அதனை தடுக்கவேண்டும், இக்கொடூரத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல் கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் உள்ளது.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் மாடுகளின் மீது அமிலம் வீசிய கொடூர சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரைமாவட்டம் சூர்யா நகர் பகுதியில் சுற்றித்திருந்த மாடுகள் மீது சிலர் அமிலத்தை வீசியுள்ளனர். அதில் காயமடைந்த மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடைத் துறை அதிகாரிகள் முன்வராததால், மாடுகள் தீக்காயங்களுடன் பரிதவித்து நிற்கின்றன.

காயங்களுடனே சுற்றித்திரியும் மாடுகளை கண்டு அப்பகுதி மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

மாடுகள் காயம் அடைந்த தகவலையும் அதற்கு உரிய சிகிச்சை அளிக்கவும் கால்நடைத்துறை அதிகாரிகளிடம் மக்கள் முறையிட்டுள்ளனர்.

இதேபோல், அப்பகுதியைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு மாடுகளின் நிலைமை குறித்து கால்நடை துறையினரிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆதலால் கால்நடைத்துறையினர் விரைந்து மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதோடு. மாடுகளின் அமிலம் வீசிய மர்ம நபர்களை கண்டுபிடித்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே