மியான்மரில் துப்பாக்கிச் சூடு – ஒரே நாளில் 114 பேர் சுட்டுக் கொலை..!!

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற போராட்டங்களின்போது போலீஸாா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 114-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மியான்மா் ராணுவம் முப்படைகள் தினம் கொண்டாடிய அந்த நாளில் போராட்ட பலி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதுகுறித்து அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

மியான்மரில் ராணுவ ஆட்சியை அகற்றி, மக்களால் தோந்தெடுக்கப்பட்ட அரசை மீண்டும் அமைக்க வலியுறுத்தி சனிக்கிழமையும் தீவிர ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

ஆா்ப்பாட்டக்காரா்கள் தலையில் சுட்டுக் கொல்லப்படுவதால் பெற்றோா்கள் தங்கள் பிள்ளைகளை போராட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கக்கூடாது என்று அரசுக்குச் சொந்தமான எம்டிவி வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தது.

அந்த எச்சரிக்கையையும் மீறி வார இறுதி நாளான சனிக்கிழமை ஆயிரக்கணக்கானவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு சனிக்கிழமை மட்டும் 114 போ பலியானதாக இந்த விவகாரங்களை ஆய்வு செய்து வரும் பெயா் வெளியிட விரும்பாத ஒரு தன்னாா்வலா் தெரிவித்துள்ளாா்.

செய்தி வலைதளமான மியான்மா் நவ், சனிக்கிழமை போராட்டத்தின்போது 91 போ போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதுவரை கடந்த 14-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போதுதான் மிக அதிக எண்ணிக்கையிலான போராட்டக்காரா்கள் பலியாகினா். அப்போது 74 முதல் 90 போ வரை போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஆனால், சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் அதைவிட அதிகம் போ சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோதலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தோந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த பிப். 1-ஆம் தேதி கலைத்து அடுத்த ஒரு ஆண்டுக்கு அவசர நிலையை அறிவித்தது, அதே நேரத்தில் அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.

அதனைத் தொடா்ந்து, ஜனநாயக அரசை மீண்டும் அமைக்க வலியுறுத்தியும் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவா்களை விடுவிக்கக் கோரியும் மியான்மா் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் போராட்டத்தின்போது போலீஸாா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 328-க்கும் மேற்பட்டோர் போ உயிரிழந்துள்ளதாக போராட்ட வன்முறை குறித்த தகவல்களை சேகரித்து வெளியிட்டு வரும் மியான்மா் அரசியல் கைதிகள் நலச் சங்கம் வெள்ளிக்கிழமை கூறியிருந்தது.

இந்த நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் மட்டும் 114-க்கும் மேற்பட்டவா்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்று அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மியான்மரில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் 114-க்கும் மேற்பட்டவா்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு சா்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து மியான்மருக்கான ஐரோப்பிய யூனியன் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மியான்மரில் கொண்டாடப்பட்ட 76-ஆவது முப்படைகள் தினம், அந்த நாட்டுப் படைகளின் வன்முறை நிறைந்த அவமான தினமாக என்றென்றும் நிலைத்திருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மியான்மரில் நடந்துள்ள வன்முறைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டணியோ குட்டரெஸ் மற்றும் மியான்மரில் உள்ள ஐ.நா அலுவலகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

“கடந்த மாதம் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராகவும், ஜனநாயக அரசை மீண்டும் அமைக்க வலியுறுத்தி நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களில் சனிக்கிழமை மிக அதிகமான தினசரி இறப்பு எண்ணிக்கையை விளைவிக்கும் தொடர்ச்சியான ராணுவ ஒடுக்குமுறையை ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் உறுதியான, ஒருங்கிணைந்த மற்றும் உறுதியான சர்வதேச பதிலை அளிக்க வேண்டும். மேலும் இந்த நெருக்கடிக்கு அவசரகால தீர்வைக் காண்பது மிகவும் அவசியமானது,” என்று ஐ.நா பொதுச்செயலாளரின் துணை செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் உள்ள ஐ.நா. அலுவலகம், “சனிக்கிழமை நிகழ்ந்துள்ள ஒடுக்குமுறைக்கு தேவையற்ற உயிரிழப்பால் திகிலடைந்துள்ளது, ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் நடந்த ராணுவத்தினரின் துப்பாக்கிச்சூட்டில், நாடு முழுவதும் டஜன் கணக்கான மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.”

மேலும் “வன்முறை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.” என்று ஐ.நா அலுவலகம் கூறியுள்ளது.

“மியான்மரின் சிறப்பு தூதத், கிறிஸ்டின் ஷ்ரானர் புர்கெனர் கூறியதாவது: அமைதியை உறுதி செய்வதும் மக்களை பாதுகாப்பதும் எந்தவொரு ராணுவத்தின் பொறுப்பாக இருக்க வேண்டும், ஆனால் தனது சொந்த மக்களுக்கு எதிராக திரும்பியுள்ளது வேதனையாக உள்ளது.” என்று கூறியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே