ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது காரணமாக சூர்யா தயாரித்த அவரது மனைவி ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் அமேசான் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் பிளாட்பார்மில் வெளியானது.
 மக்களிடையே இதற்கு பெரிய வரவேற்பும் கிடைத்தது. அதனை தொடர்ந்து தற்போது கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பென்குயின் படமும் அமேசான் ப்ரைமில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் அட்லி தயாரிப்பில் உருவாகியுள்ள அந்தகாரம் படம் நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 அட்லி தயாரித்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் சமீபத்தில் ரிலீசாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கைதி படத்தின் வில்லன் அர்ஜுன் தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனை தாண்டி பூஜா ராமச்சந்திரன், மிஷா கோஷல், வினோத் கிஷன் ஆகியோரும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் வரும் முல்லையா இது அட்டகாசமான புகைப்படங்கள்!
- கார்த்திக் சுப்புராஜ் உடன் கேங்க்ஸ்டர் படத்தில் நடிக்கப்போகும் சியான் விக்ரம் நடிகர்!


 
							