அசாதுதின் ஒவைசியின் கட்சிக்கு தமிழகத்தில் பட்டம் சின்னம் ஒதுக்கீடு..!!

வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஐதராபாத் எம்பி அசாதுதீனின் ஒவைசி கட்சிக்கு பட்டம் சின்னம் ஒதுக்கி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஐதராபாத் எம்.பி அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் சுருக்கமாக, ஏஐஎம்ஐஎம் கட்சி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளைவிடவும் பா.ஜவை வெளுத்து வாங்குவது ஓவைசிதான்.

குறிப்பாக பாஜ கொண்டு வந்த மக்களுக்கு எதிரான பல்வேறு திட்டங்களை கடுமையாக தொடர்ந்து விமர்சித்து வருகிறது.

இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில்  ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில்,’தமிழகத்தில் போட்டியிட இருக்கும் ஒவைசியின் கட்சிக்கு பட்டம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே சின்னத்தை அக்கட்சி மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே