கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு காத்திருக்கிறீர்களா? நிச்சயம் தெரிந்துகொள்ளவேண்டிய தடுப்பூசி தொடர்பான விளக்கங்கள் இதோ..

கொரோனா வைரஸைப் பொறுத்தவரையில், igG புரதங்கள் எவ்வளவு காலம் வரை அடுத்த கொரோனா தொற்றுக்கு எதிரான திறனை உடலுக்கு அளிக்கும் என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

ஆக்டிவ் இம்யூனிட்டி என்றால் என்ன? (Active Immunity)

ஆக்டிவ் இம்யூனிட்டி என்பது, ஒரு நுண்ணுயிரிக்கு மனிதர்கள்  ஆட்படும்போது, உருவாகும் எதிர்ப்புத்திறனைக் குறிக்கிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றைப் பொருத்தவரை, வைரஸால் பாதிக்கப்பட்ட பிறகும் ஆறு மாதங்கள் வரை எதிர்ப்புத்திறன் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

ஆண்டிபாடி உருவாக்கம்

உலக சுகாதார அமையத்தின் ஆண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸுக்கான உதவி இயக்குநர் ஜெனரலான ஹனான் பல்கி, ஆண்டிபாடீஸ் என்பதை எப்படி வரையறுக்கிறார் தெரியுமா? மனித உடலில் ஆண்டிஜென்கள் என்னும் மற்றொரு உயிரினங்களை எதிர்கொள்கையில் உருவாக்கும் எதிர் திறனிகளாக வரையறுக்கிறார். இரண்டு வகை இம்யூனோ குளோபுளின்கள் உள்ளன. IgM மற்றும் IgG.

IgM எனப்து தொற்றின் தொடக்க காலத்திலேயே உருவாகிவிடுகிறது. igG என்பது தொற்றிலிருந்து குணமாகும் நேரத்தில் உடலால் உருவாக்கப்படும் புரதங்களாகும். கொரோனா வைரஸைப் பொறுத்தவரையில், igG புரதங்கள் எவ்வளவு காலம் வரை அடுத்த கொரோனா தொற்றுக்கு எதிரான திறனை உடலுக்கு அளிக்கும் என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

இன் ஆக்டிவேட்டட் தடுப்பூசி என்றால் என்ன? – Killed Or Inactivated Vaccine

கோவிட் 19-ஐப் பொறுத்தவரை, வைரஸ் தாங்கி வரும் நோயின் பெயர் SARS-CoV-2. இது வேதிப்பொருட்களால், வெப்பத்தால், கதிர்வீச்சால் கொல்லப்பட்டு அதற்குப் பிறகு தடுப்பூசியாக அளிக்கப்படுகிறது. கோவேக்சின் என்னும் பாரத் பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ கழகத்தால் தயாரிக்கப்பட்டுள்ள தடிப்பூசியின் வகை இன் – ஆக்டிவேட்டட் தடுப்பூசி வகையைச் சேர்ந்ததுதான்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே