ஏப். 6-க்கு பிறகு ஊரடங்கு என்ற தகவல் வதந்தி: சுகாதாரத் துறை செயலர் அறிவிப்பு

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற தகவல் வதந்தி என்று சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

இதுகுறித்து சென்னையில் அவர் நேற்று கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தற்போது தகுதி உள்ள அனைவரும் தடுப்பூசிபோட்டுக் கொள்ள வேண்டும்.

முகக் கவசம் அணிதல், சமூகஇடைவெளி பின்பற்றுதல், கை கழுவுதல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். இதன்மூலம் தொற்று பரவலை கட்டுப்படுத்தலாம். ஒரு தெருவில் 3 பேருக்கு மேல் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டால், அந்த தெரு நோய் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்படும். அந்த தெருவில் இருந்து, வெளிநபர்கள் உள்ளே வருவதும்,உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்வதும் தடுக்கப்படும்.

‘தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்’ என்றதகவல் பரப்பப்படுகிறது. இது வதந்தி. பொதுமக்கள் இதை நம்ப வேண்டாம். தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைபின்பற்றினால், நோய் தொற்றை கட்டுப்படுத்தலாம். கரோனாபாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே