தமிழகத்தில் உள்ள அரசு அலுவலங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!!

அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சோதனையில் அக்.1 முதல் நவ.6 வரை ரூ.4.29 கோடி சிக்கியது.

இதுதொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சோதனையில், அக்டோபர் 1 முதல் நவம்பர் 6-ஆம் தேதி வரை 4 கோடியே 29 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

54 அரசு அலுவலகங்களில் கணக்கில் வராத 519 சவரன் தங்க நகைகள், 6.5 கிலோ வெள்ளி, வங்கி இருப்பு விவரங்கள் மற்றும் ஆவணங்கள் கிடைத்துள்ளன.

போக்குவரத்துத் துறை, பத்திரப்பதிவு, பொதுப்பணி, வருவாய், மாசுக் கட்டுப்பாடு, வேளாண் மற்றும் மின்துறை ஆகிய துறைகளிலும் லஞ்சம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. 

அதிகபட்சமாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளர் பன்னீர்செல்வத்திடம் 3.26 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் லஞ்சம் கொடுத்தபோது 16 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே