லஞ்ச ஒழிப்பு சோதனை – 33 அரசு அதிகாரிகள் கைது..!!

கடந்த 75 நாட்களாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் மேற்கொண்டதில், 7.2 கிலோ தங்கம், 9.8 கிலோ வெள்ளி, 10.52 காரட் வைரமும் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த 75 நாட்களாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அந்த சோதனையில், புகாரின் பேரில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.62.82 லட்சம் கைப்பற்றப்பட்டது. மேலும், திடீரென நடத்தப்பட்ட சோதனையில், ரூ.6.96 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சோதனையில், மொத்தம் 7.2 கிலோ தங்கம், 9.8 கிலோ வெள்ளி, 10.52 காரட் வைரமும் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

01.10.2020 முதல் 14.12.2020 வரை நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் 33 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே