சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு கானத்தூர் ஆகிய பகுதிகளில் ANPR எனப்படும் அதி நவீன தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் செயல்பாட்டையும் புதிதாக கட்டப்பட்டுள்ள புறநகர் காவல் நிலையத்தையும் மாநகர காவல் ஆணையர் A.K.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
இந்த அதிநவீன கேமராக்கள் சாலையில் செல்லும் வாகனங்களின் பதிவு எண்களை படம்பிடித்து அதன் உரிமையாளரின் விபரங்களை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும் திறன் கொண்டது. இதனால் குற்றச்செயல்கள், வாகன விதிமீறல்கள், விபத்துக்கள் உள்ளிட்டவைகளின் போது வாகன உரிமையாளர்களை எளிதில் அடையாளம் காணலாம். தொடர்ந்து சோழிங்கநல்லூரில் 217 கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை தொடங்கி வைத்து பேசிய மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் சிசிடிவி கேமராக்களால் குற்றங்கள் குறைந்து விட்டதாக கூறினார்.
சென்னை முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க நன்கொடை வழங்கிய நபர்களுக்கு மாநகர காவல் துறையின் சார்பில் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நன்கொடையாளர்களுக்கு A.K.விஸ்வநாதன் உணவுகளை பரிமாறி மகிழ்ந்தார்.