பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியாகும் தேதி மீண்டும் ஒத்தி வைப்பு..!!

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிட இருந்த நிலையில் வரும் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 458 பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பொறியியல் கலந்தாய்வுக்கு 1 லட்சத்து ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஆனால், 1 லட்சத்து 14 ஆயிரம் பேர் மட்டுமே சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி வெளியிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

இன்று மாலை சென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தரவரிசை பட்டியலை வெளியிடுவார் என்று கூறப்பட்டு இருந்தது.

ஆனால், இது வரும் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடப்பு கல்வியாண்டில், கலந்தாய்வு மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 458 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 877 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.

மாணவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் இன்னும் முடியாததால் தரவரிசை வெளியீடு தள்ளிப்போகிறது. www.tneaonline.org-ல் தங்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு விட்டதா என மாணவர்கள் அறியலாம்.

செப்டம்பர் 17, 25, 28 என மூன்றாவது முறையாக தரவரிசைப்பட்டியல் வெளியிடும் தேதி மாற்றப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே