நாளை முதல் அண்ணா பல்கலைக்கழகம் வழக்கம் போல் செயல்படும்; பேராசிரியர்கள், ஊழியர்கள் கட்டாயம் பணிக்கு வர உத்தரவு!

சென்னையில் மீண்டும் ஊரடங்கு தளர்வு அளிக்கப்படுள்ளதால் நாளை முதல் அண்ணா பல்கலைக் கழகம் வழக்கமாக செயல்படும் என்று பல்கலைக் கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

சென்னையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக் கழகத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

தற்போது நாளை முதல் சற்று தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. கடைகள் காலை முதல் மாலை வரை திறந்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து நாளை முதல் அண்ணா பல்கலைக் கழகம் செயல்படும் என்று பல்கலைக் கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

எனவே, அனைத்து அலுவலர்களும் பேராசிரியர்களும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். 

பணிக்கு வாராதவர்கள் விடுப்பு எடுத்ததாக கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே