திடீர் திருமணம் செய்து கொண்டார் நடிகர் யோகி பாபு…!!

ரகசியமாக நடந்த யோகிபாபுவின் திருமணம் குறித்து கோடம்பாக்கத்தில் பரபரப்பான பேச்சு கிளம்பியுள்ளது.

நகைச்சுவை நடிகர் யோகி பாபு மான் கராத்தே, யாமிருக்க பயமேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவருக்கு நடிகை ஒருவருடன் திருமணம் நடைபெற உள்ளதாக பல தகவல்கள் கடந்த மாதம் கோலிவுட் வட்டாரத்தில் சிசுசிசுக்கப்பட்டது.

எனக்கு திருமணம் என்றால் அனைவரிடமும் தெரிவிப்பேன் என்று தெரிவித்தார்.

குலதெய்வ கோவிலில் வைத்து இன்று காலை நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கும் மஞ்சு பார்கவிக்கும் திடீர் திருமணம் நடைபெற்றது.

வரும் மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து யோகி பாபுவை தொடர்பு கொண்ட போது அவர் எந்த வித போன் அழைப்புகளையும் ஏற்கவில்லை.

அவரின் உதவியாளர் மற்றும் நண்பர்களிடம் பேசிய போதும் சரியான தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

யோகி பாபுவின் திருமணத்தில் அவர்களது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளதாக நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

யோகி பாபு திருமணம் நடைபெறுவதை ஒட்டி அக்கோவிலில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.

இவ்வளவு ரகசியமாக ஏன்? என யோகி பாபுவின் நட்பு வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம்.

எங்களுக்குமே உண்மையான காரணம் தெரியல. பொதுவா கல்யாணம் குறித்துப் பேசிட்டிருந்தப்பெல்லாம் ரஜினி சார், விஜய் சார், அஜித் சார்னு அத்தனை பேரும் நம்ம கல்யாணத்துல இருக்கணும்.

அந்த மாதிரி ஒரு தேதியை முடிவு பண்ணிட்டுத்தான் கல்யாணம் பண்ணணும்னுதான் சொல்லிட்டிருந்தார்.

நாலு நாளைக்கு முன்னாடி திருநெல்வேலியில இருந்து ஷூட்டிங் முடிச்சுட்டு வந்தவர், காதும் காதும் வச்ச மாதிரி சிலரைக் கூப்பிட்டு திருமணத் தகவலைச் சொல்லி, ரெடியா இருங்க போகணும்னு சொல்லியிருக்கார்.

கல்யாணத்துல கலந்துக்கிட்டவங்க எண்ணிக்கை பார்த்தீங்கன்னா, மொத்தத்துல பத்து பேர் கூட இருக்க மாட்டாங்க.

காமெடியில் இப்போ நம்பர் 1 நடிகர் அவர். வசதிக்கெல்லாம் இப்ப குறையில்லை. எல்லாரையும் அழைச்சு மீடியாவுக்குத் தெரிவிச்சு ஊருக்கே சோறு போட்டு சந்தோஷமா நடத்தலாம்.

ஏன் இப்படி நடத்தினார்ங்கிறது ரகசியமாவே இருக்கு. செய்யாறுலகூட தங்கியிருந்த ஹோட்டல்ல இருந்து ராத்திரி 11 மணிக்கே எல்லாரும் கிளம்பி பக்கத்துல ஏதோவொரு கிராமத்துல ஒரு வீட்டுல போய் தங்கியிருக்காங்க.

அதேபோல மணப்பெண் வீட்டுல இருந்து பெண்ணின் அப்பா அம்மா உட்பட ஒருத்தர்கூட கலந்துக்கலைன்னும் தெரியுது. எல்லா கேள்விகளுக்குமான பதில் யோகி பாபு கிட்ட மட்டும்தான் இருக்கு என்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே