காங்கிரசிடம் அமித்ஷா சவால்!

காங்கிரஸ் கட்சியினர் எவ்வளவுதான் எதிர்த்து போராடினாலும், குடியுரிமை சட்டத்தின் நோக்கம் நிறைவேறும் வரை மத்திய அரசு ஓயாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம், ஜபல்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் சிறப்புகளை மக்களுக்கு விளக்கும் வகையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒருவருடைய குடியுரிமையை பறிக்கும் வகையிலான அம்சங்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இல்லை என்று கூறினார்.

அவ்வாறு ஷரத்துகள் இருப்பதை ராகுல்காந்தியும், மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜியும் சுட்டிக்காட்ட முடியுமா என்று அமித்ஷா சவால் விடுத்தார்.

நாட்டை பிளவுபடுத்தும் வகையில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டு வருவதை கோடிட்டு காட்டிய அமித்ஷா, நாட்டை துண்டாட நினைப்பவர்கள் சிறையில் தள்ளப்படுவார்கள் என்றும் எச்சரித்தார்.

பாகிஸ்தானில் கொடுமைகளுக்கு ஆளான ஒவ்வொரு அகதிக்கும் இந்திய குடியுரிமை அளிக்கும் வரை மத்திய அரசு ஓயாது என்றும் அமித்ஷா உறுதிப்படக் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே