அம்பானியின் அடுத்த இலவசம்; இரவோடு இரவாக அறிமுகமான ஜியோமீட்!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிரபல வீடியோ கான்பிரன்சிங் தளமான ஜூம் ஆப்பிற்கு (Zoom App) வேட்டு வைக்கும் வண்ணம் அதன் ஜியோமீட் ஆப்பை (JioMeet) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ கடந்த வியாழக்கிழமை இரவு தனது வீடியோ கான்பரன்சிங் பயன்பாட்டை “சிறிய அளவிலான ரசிகர்களுடன்” அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய ஜியோமீட் ஆப் ஆனது ஏற்கனவே கூகுள் பிளே மற்றும் ஆப் ஸ்டோரில் கிடைக்கின்றன. இடைவிடாத நிதி சார்ந்த புதுப்பிப்புகளுக்குப் பிறகு, ரிலையன்ஸ் ஜியோ தனது முதல் புதிய தயாரிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இது ஜூம், கூகுள் மீட், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் மற்றும் பிற பிரபலமான வீடியோ கான்பரன்சிங் டூல்களுக்கு எதிராக தனது ஆட்டத்தை கட்டவிழ்த்து விடும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

புதிய ஜியோமீட் ஆப்பால் நேரடி அழைப்புகள் முதல் அதாவது வழக்கமான ஒருவருடன் மற்றொருவர் பேசுவது முதல், 100 பங்கேற்பாளர்களுடன் மீட்டிங்களை நடத்துவது வரையிலான ஆதரவை கொண்டுள்ளது.

உங்கள் தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் ஐடியுடன் ஜியோமீட் உடன் பதிவுபெறலாம், மேலும் இது எச்டி தரத்தை ஆதரிக்கிறது. இது பயன்படுத்த முற்றிலும் இலவசம் மற்றும் நீங்கள் ஒரு நாளைக்கு வரம்பற்ற மீட்டிங்களை உருவாக்கலாம். ஜியோ மீட் வழியாக நடக்கும் மீட்டிங் ஆனது, பாஸ்வேர்ட் கொண்டு பாதுகாக்கப்படலாம் மற்றும் இது ஜூம் போன்ற வெயிட்டிங் ரூமையும் ஆதரிக்கலாம்.
ஜியோ மீட் ஆப் ஆனது மிகவும் எளிமையான இன்டர்பேஸைக் கொண்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் கிட்டத்தட்ட ஜூம் ஆப் போலே இருக்கிறது.

தடைசெய்யப்பட்ட ஒவ்வொரு சீன ஆப்பிற்கும் சரியான மாற்று ஆப்ஸ்; இதோ முழு லிஸ்ட்!

இந்த ஆப் ஐந்து சாதனங்கள் வரையிலான மல்டி டிவைஸ் லாக்இன் ஆதரவை ஆதரிக்கிறது என்றும், அழைப்பில் இருக்கும்போது சாதனங்களுக்கு இடையில் நீங்கள் தடையின்றி மாறலாம் என்றும் ஜியோ நிறுவனம் கூறுகிறது. இதில் Safe Driving Mode போன்ற புதிய அம்சமும் மற்றும் Screen Share போன்ற நிலையான அம்சங்களும் உள்ளன.

இந்த ஆப் இப்போது தான் பொதுமக்களுக்குக் கிடைக்கிறது என்றாலும் கூட, ஜியோ இதை இரண்டு மாதங்களாக சோதித்து வந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே